திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரச்சார ஆட்டோவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் பெரியசாமி. 
Regional03

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்டோவுடன் போராடிய சுயேச்சை :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மருது அழகுராஜ், திமுக சார்பில் கே.ஆர். பெரியகருப்பன், அமமுக சார்பில் கே.கே. உமாதேவன் உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சையாக போட்டியிடும் பெரியசாமி என்பவருக்கு தர்பூசணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். ஆனால், வாகனத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. மூன்று நாட்களாக அலைந்தும் அனுமதி கிடைக்காததால் நேற்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரச்சாரத்துக்காக வாடகைக்கு எடுத்த ஆட்டோவுடன் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து கூறுகையில், ‘‘தற்போது தான் எனது கவனத்துக்கு வந்தது. உடனடியாக அனுமதி வழங்கி விட்டேன். மேலும் அந்த பிரிவில் இருந்த ஊழியரையும் இடமாற்றம் செய்து விட்டேன்,’’ என்றார்.

SCROLL FOR NEXT