Regional02

பெண் மரணத்தில் மர்மம் எனக் கூறி உறவினர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் புன்னம்சத்தி ரம் அருகே உள்ள குட்டக்கடையைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன்(30). இவரது மனைவி கவுரி (24). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து கவுரி காய மடைந்ததாகக்கூறி, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் பாலசுப்பிரமணியன் நேற்று சேர்த்துள்ளார். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் கவுரியை சேர்த்தபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கவுரியின் பெற்றோர், உறவினர்கள் பாலசுப்பிரமணியன் வரதட்சணை கேட்டு கவுரியை கொடுமைப்படுத்தி வந்ததால் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி, சட லத்தை பெற மறுத்து காந்திகிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர்- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT