Regional01

பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.80 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.79,99,065 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 45 பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் 45 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 10 வீடியோ கண் காணிப்பு குழுக்கள், 5 செலவின கண்காணிப்பு குழுக்களும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளன.

பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.79,99,065 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோல் 29 மதுபாட்டில்கள், 251 வேட்டிகள், 3 துண்டுகள், 5 பை கவரிங் நகைகள், 10.70 கி.கி. வெள்ளி, 1 வாகனம், 70 பாட்டில் சமையல் எண்ணெய், 3,500 கி.கி. அரிசி, 40 கி.கி. துவரம் பருப்பு, 590 பம்பரம், 66 பழைய கைபேசிகள், 530 பிரச்சார புத்தகங்கள், 63 புதிய கைபேசிகள், 600 தொப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை தேர்தல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 1,911 தகவல்கள் பெறப் பட்டுள்ளன.

1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 1,911 தகவல்கள் பெறப் பட்டுள்ளன.

SCROLL FOR NEXT