தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட் டுள்ள தூத்துக்குடி மாணவர் களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேயுள்ள ஈச்சங்காட்டில் நடைபெற்ற மாநில வில்வித்தை போட்டியில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் பா.ஹரிஹர சுதன் இளம் வயது பிரிவில் முதலிடமும், ஜான் பினேஹாஸ் 2-வதுஇடமும் பெற்றனர். தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது ரியாஸ் பெரியோர் பிரிவில் 2-வது இடம் பிடித்தார்.
இம்மாணவர்கள் பெங்களூருவில் நடைபெற வுள்ள தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில்பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தேசிய அளவில் முதலிடம் பிடிக்க வாழ்த்தினார்.
மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, தூத்துக்குடி ஆர்ச்செரி பயிற்சியாளர் உக்கிரபாண்டியன் ஆகியோர் உடனி ருந்தனர்.