TNadu

அமைச்சருக்கு ஆதரவாக : செயல்பட்டதாக : டிஎஸ்பி சஸ்பெண்ட் :

செய்திப்பிரிவு

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார். கடந்த 25-ம்தேதி தேர்தல் செலவின பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா ஜோலார்பேட்டை பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்தஒரு காரை அவர் சோதனையிட்டார். அந்தக் காரில் அதிமுகசின்னம் அச்சடித்த 39 டி-ஷர்ட்டுகள், அதிமுக கரை வேட்டி ஒன்று, 350 துண்டுப் பிரசுரங்கள் இருந்தன.

இது தொடர்பாக அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி உட்படஅவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரன் புகார் அளித்தார். ஆனால் ஜோலார்பேட்டை போலீஸார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலையீட்டால் கே.சி.வீரமணி மீதுமட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், செலவின பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யஇந்திய தேர்தல் ஆணையம்சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT