அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆதித்தமிழர் பேரவைநிறுவனர் இரா.அதியமான் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவிநாசிஅருகே புஞ்சைத் தாமரைக்குளம் ஊராட்சி பகுதியில், இவரைஆதரித்து நேற்று இரவு அப்பகுதியில் பிரச்சார வாகனம் சென்றது.அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வாகனத்தின் இருந்த பதாகைகளை சிலர் கிழித்துள்ளனர். மேலும், பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி ஒலிப்பெருக்கியை அணைக்குமாறு சாவியை பறித்து சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, புஞ்சைத் தாமரைக்குளம் பகுதியில் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் திரண்டனர். சம்பவ இடத்துக்கு சேவூர்போலீஸார் சென்று விசாரிக்கின்ற னர்.