Regional02

கணவர் கொலை வழக்கில் - மனைவியின் சகோதரருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை :

செய்திப்பிரிவு

குன்னூரில் சகோதரியின்கணவரை விஷம் வைத்து எரித்துக்கொன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேல் கரன்சி பகுதியைச் சேர்ந்த தனியார் எஸ்டேட் காவலாளிரவிச்சந்திரன் (50). இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு ரவிச்சந்திரன் திடீரென காணாமல் போனார். இதையடுத்து, தனது தம்பியை காணவில்லை என்று, அவரது சகோதரர் கருத்தபாண்டிமேல் குன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே ஒரு தனியார் எஸ்டேட்டில் எரிந்த நிலையில் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் சென்று சடலத்தை தோண்டி எடுத்தனர்.தன் தம்பி தான் என்று கருத்தபாண்டியிடம் உறுதி செய்தபின், அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுதொடர்பாக பூங்கோதை, அவரது தம்பி வனராஜ், 16 வயது மகன் ஆகியோரிடம் விசாரித்தபோது, மூன்று பேரும் சேர்ந்து விஷம் வைத்து கொன்று, பின்னர் எரித்து புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி அருணாச்சலம், ரவிச்சந்திரனை எரித்துக் கொன்ற வனராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்புஅளித்தார். தகுந்த ஆதாரம் இல்லாததால் மனைவி பூங்கோதையை வழக்கிலிருந்து விடுவித்தார்.

SCROLL FOR NEXT