சேலத்தில் நேற்று முன்தினத்தை விட நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. நேற்று 106.7 டிகிரி வெயில் பதிவானது.
கோடையின் தாக்கம் சேலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடப்பாண்டில் அதிகபட்சமாக பகல்நேர வெப்பம் 109.1 டிகிரி பதிவானது. இதனால், நேற்று முன்தினம் இரவு வரை அனல் காற்று வீசியது.மேலும் சில நாட்களுக்கு சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால், நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என மக்களிடம் அச்சம் நிலவியது.
இந்நிலையில், சேலத்தில் நேற்று வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து 106.7 டிகிரி பதிவானது. எனினும், நேற்றும் வழக்கத்தைவிட அனல்காற்று வீசியதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.