கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்சி.சம்பத் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகி களும் தனித்தனியாக வாக்கு கேட்டு வருகின்றனர்.பல்வேறு அமைப்பினரும் அவருக்கு ஆதரவு தெரி வித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் சீனு ராஜசேகர், இளைஞரணி தலைவர் ராஜ்குமார், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் பச்சையப்பன், செயலாளர் அன்பு, நகர தலைவர்கள் சாரதி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் எம்.சி.சம் பத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து நேதாஜி சாலையில் வாக்கு சேகரித் தனர். அதன்பிறகு கடை, கடையாகச் சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். மாதந்தோ றும் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். கடலூரில் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தரப்படும். ரூ.50 ஆயிரம் கோடியில்பெட்ரோ கெமிக்கல் தொழிற் சாலை விரைவில் அமைய இருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், பாமக. முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பழதாமரைக்கண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கடலூரில் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தரப்படும்.