கடலூரில் திமுக வேட்பாளர் ஐயப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
Regional03

நகராட்சி மாநகராட்சியாகும் - கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா : திமுக வேட்பாளர் ஐயப்பன் உறுதி

செய்திப்பிரிவு

கடலூர் திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் கூட்டணிக்கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடலூர் திருப்பாதிரிபுலியூர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் நேற்று திமுக வேட்பா ளர் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

கடலூர் பகுதியில் கைத்தறிபூங்கா, தகவல் தொழில்நுட்பபூங்கா, காகித தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது படி கடலூர் நகராட்சி மாநகராட்சியாக் கப்படும். பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும், குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். எனக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏ இள புகேழந்தி, நகர திமுக செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாமரைச்செல்வன் உள்ளிட்ட திமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந் தனர்.

SCROLL FOR NEXT