திமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் கள்ளக்குறிச்சி தொகுதில் உள்ள மேலூர், தென்கீரனுர் பகுதியில் உள்ள கிராமங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரச் சாரம் மேற்கொண்டார்
அப்போது வாக்காளர்களி டையே பேசிய அவர், “கள்ளக் குறிச்சி பகுதி கிராமங்களில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தார் சாலை, திருவிளக்கு, வடிகால் வசதி சீர் செய்துதரப்படும். ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தவுடன் கல்விக்கடன் ரத்து, பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய லாம், கரும்புக்கு அதிக விலை,பெட்ரோல் டீசல் விலை குறை யும் எனவே கை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங் கள் ”என்று வாக்குறுதி அளித்தார், வேட்பாளர் மணிரத்னத்துடன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் வெங்கடாச்சலம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராம மூர்த்தி, காமராஜ், சண்முகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண் டனர்.