பர்கூர் அருகே கிரானைட் கற்கள் வந்த வியாபாரிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5.59 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அச்சமங்கலம் கூட்டுரோடு பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 800 இருந்தது தெரிந்தது. விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த முனீர் (42), கிரானைட் கற்கள் வாங்க பணம் எடுத்து வந்தது தெரிந்தது. இதேபோல், தமிழக