Regional02

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2015-ல் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்(முறையீடுகள் தாக்கல், விசாரணைமற்றும் தீர்வு செய்யப்படுதல் முறைகள்) விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான வரி விதிப்பு முரண்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிலங்களை ஆக்கிரமித்தல், நிதி முறைகேடுகள், கையூட்டுகள் போன்ற இனங்கள் மீதான புகார்கள், உள்ளாட்சிஅமைப்பு அலுவலர்கள், பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை செயலர், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம், எண். 100, அண்ணாசால, கிண்டி, சென்னை - 600 032 என்றமுகவரியில் தெரிவிக்கலாம். மேலும், 044 - 22201337 என்ற தொலைபேசி எண்ணிலும், ombudsmanlocal@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்களை தெரிவித்து தீர்வுகாணலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பானபுகாா்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT