Regional02

அதிமுக விளம்பர வாகன ஓட்டுநரை தாக்கியதாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள சாலிகரைப் பட்டியைச் சேர்ந்தவர் மணிராஜா(25). அதிமுக தேர்தல் பிரச்சார மினி வேனை ஓட்டி வரும் இவர், நேற்று முன்தினம் பஞ்சமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே மினி வேனை ஓட்டிவந்துள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த பாலாஜி, மோகன்ராஜ், அரவிந்த், முருகன் ஆகியோர் மினி வேனை மறித்து, மணிராஜாவை திட்டி, தாக்கி உள்ளனர்.

இதில், காயமடைந்த மணிராஜா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலாஜி, மோகன்ராஜ், அரவிந்த், முருகன் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT