பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவரும், உலகத் திருக்குறள் தகவல் மைய தலைவருமான பேராசிரியர் வளன்அரசுக்கு தில்லி நட்புறவு பேரவை, தேசிய கல்வி தலைமை பண்பு விருது, பெருஞ்சிறப்பு வாய்ந்த சேவை விருது ஆகிய இரு விருதுகளை வழங்கி பாராட்டியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக கல்வி மற்றும் இலக்கிய துறைகளில் சிறப்பான பணிக்காகவும், மாணவர், ஆசிரியர் மேம்பாடு, சமயநல்லிணக்கம் மற்றும் நாட்டு முன்னேற்றத்துக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப் பட்டிருக்கின்றன.