Regional03

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு - டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 4.04.2021 காலை 10 மணி முதல் தேர்தல் நாளான 6.04.2021 இரவு 12 மணி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2.05.2021 அன்றும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து உரிமதலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நாட்களில் மது விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT