தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப் பாளராக உள்ள பிரவீன்குமார் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என மாவட்ட காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.