கிருஷ்ணகிரியில் நண்பருடன் சேர்ந்து 4 வயது மகனை கொலை செய்த பெண்ணிற்கு, 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிவகங்ககை மாவடடம் இளையான்குடியைச் சேர்ந்தவர் சிவானந்தம். ராணுவ வீரர். இவரது மனைவி வனிதா (29). இவர்களது மகன் நந்தீஸ்குமார் (4). வனிதாவிற்கும், அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான கார்த்திக்ராஜா (எ) சிவகார்த்திக் (28) என்பவருக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2 பேரும், குழந்தையுடன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். கடந்த 2015-ம்ஆகஸ்ட் 18-ம் தேதி, குழந்தையை இருவரும் சேர்ந்துகடுமையாக தாக்கினர். இதில்படுகாயம் அடைந்த குழந்தையை தூக்கி கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்தனர். ஆனால், குழந்தை உயிரிழந்தது. சடலத்தை 2 பேரும் சேர்ந்து கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் புதைத்துவிட்டு தப்பினர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வனிதா, கார்த்திக்ராஜா ஆகியோரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று 2 பேரும் வெளியே வந்தனர். இதில் கார்த்திக்ராஜா தலைமறைவாகிவிட்டார்.
இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், நண்பருடன் சேர்ந்து மகனை அடித்துக் கொலை செய்த வனிதாவிற்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்ட னையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.