Regional02

பர்கூரில் பறக்கும்படை சோதனையில் 76 பட்டுப் புடவைகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகு திக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் வரட்டனப்பள்ளி கிராமத்தில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் குப்பம் மதனப்பள்ளியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சந்தனம் என்பவர் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 402 மதிப்பிலான 76 பட்டுப் புடவைகள் இருந்தது தெரிந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கிய லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

இதே போல், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும்படை அலுவலர் ரத்தினம் தலைமையிலான குழுவினர் வாகனத்தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 ஆயிரத்து 500 மதிப்பிலான குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக ப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT