Regional02

சிவகங்கையில் 153 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு : அரசியல் கட்சிகளை விஞ்சிய சுயேச்சைகள்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேச்சைகள் மீது அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியில் 13 வேட்பாளர்கள், திருப்பத்தூரில் 26, சிவகங்கையில் 15, மானாமதுரையில் (தனி) 13 என 67 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 29-ம் தேதி வரை காரைக்குடி தொகுதியில் 45 வழக்குகள், திருப்பத்தூரில் 32, சிவகங்கையில் 46, மானாமதுரையில் (தனி) 30 என மொத்தம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதில் அதிமுகவினர் மீது 21 வழக்குகள், திமுகவினர் மீது 17, பாஜகவினர் மீது 14, காங்கிரஸார் மீது 2, இந்திய கம்யூனிஸ்ட் மீது 6, அமமுகவினர் மீது 2, நாம் தமிழர் கட்சியினர் மீது 4, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மீது 3, சுயேச்சைகள் மீது 84 என மொத்தம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT