சேலம் அருகே மது அருந்தியதை கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஆணைக்கவுண்டர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த டெய்லர் விஜயகுமார் (31). இவரது மனைவி ஈஸ்வரி (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் மது அருந்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஈஸ்வரி கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த விஜயகுமார் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
நேற்று நங்கவள்ளி காவல் நிலையத்தில் விஜயகுமார் சரண் அடைந்தார்.
இதையடுத்து, போலீஸார் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.