கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப் பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும், பணம் பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில், சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முன்னதாக டிஎஸ்பி சரவணன், சிஆர்பிஎப் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் தொடங்கிய அணி வகுப்பு, பெங்களூரு சாலை வழியாக ரவுண்டானாவை சென்ற டைந்தது. இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி நகரம் பாஸ்கரன், தாலுகா சுரேஷ்குமார் உள்ளிட்ட 117 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பனப்பள்ளி நகரிலும் துணை ராணுவத்தினர், போலீஸார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.