திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காவல்துறையினர் தங்கள் தபால் வாக்கை செலுத்தினர்.
பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் மேல் நிலைப்பள்ளியில் காவலர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு ந்தன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். மாநகர காவல் ஆணையர் அன்பு, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: மாவட்டத்தில் 9-வது பட்டாலியன் போலீஸார் 195 பேர், 12-வது பட்டாலியனில் 29 பேர், மாவட்ட போலீஸார் 1,194 பேர், மாநகர போலீஸார் 1,033 பேர் என, மொத்தம் 2,451 பேர் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் வாக்களிக்க முடியாதவர்கள் நாளை (இன்று) வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும்” என்றார்.
தென்காசி
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 12 அறைகளில் 350 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தபால் வாக்குச் சீட்டு அடங்கிய உறை வழங்கப்பட்டது. வாக்குச் சீட்டில் வாக்களித்து, உறையில் வைத்து ஒட்டி, வாக்குப் பெட்டியில் போட்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் ஆய்வு செய்தார்.
மதுக்கடைகள் மூடல்