தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டுகளை தேர்தல் பணியாளர்கள் விநியோகம் செய்தனர். படம்: என்.ராஜேஷ் 
Regional03

தூத்துக்குடியில் - வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் தகவல் சீட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று இந்த சீட்டுகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்த சீட்டுகளில் வாக்காளர்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், வாக்குச்சாவடி முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக இந்த சீட்டில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். ஆனால், இம்முறை புகைப்படம் இடம்பெறவில்லை.

இந்த சீட்டை வாக்காளர்கள் தகவல்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் வைத்துக் கொண்டு வாக்களிக்க முடியாது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்தால் தான் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT