Regional02

கொண்டத்துக் காளியம்மன் குண்டம் திருவிழா :

செய்திப்பிரிவு

அவிநாசி அருகே பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் பூசாரிகள் மட்டும் நேற்று குண்டம் இறங்கினர்.

திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால், குண்டம் திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு குண்டம் திருவிழா, கடந்த 19-ம் தேதி தொடங்கி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கரோனாதொற்று காரணமாக குண்டம் இறங்கபக்தர்களுக்கு அனுமதியில்லாததால், கோயில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். இதையடுத்து நேற்றிரவு நடைபெற்ற அம்மன் தேரோட்டத்தில் வழக்கம்போல பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT