Regional02

சாலை விபத்தில் - சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சரின் வாகனம் சேதம் :

செய்திப்பிரிவு

தாராபுரத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற உள்ளாட்சித் துறை அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவரின் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கின.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வுக்குச் சென்றிருந்தனர். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் ஆகியோர் முன் கூட்டியே அங்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் இவர்களது வாகனங்களை நேற்று மோடி பிரச்சாரத்துக்கு எடுத்து வந்துள்ளனர். அப்போது தாராபுரம் சூரியநல்லூர் அருகே காதபுள்ளப்பட்டி பிரிவு அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இதில் இரு வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. வண்டியில் இருந்த ‘ஏர் பேக்’ திறந்துகொண்டதால், வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து வாகனங்களில் வந்தவர்கள், அங்கு பின்னால் வந்த கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களில் ஏறி, பிரதமரின் பிரச்சாரத்துக்கு சென்றனர்.

SCROLL FOR NEXT