Regional02

மருந்து சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்றால் நடவடிக்கை :

செய்திப்பிரிவு

மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து சீட்டின் பேரில் மட்டுமே கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்ய வேண்டும் என ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 14 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட 179 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற்று மாத்திரைகள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

போலி மருத்துவரிடமோ அல்லது முறையான மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தாலோ அல்லது வாங்கி பயன்படுத்தினாலோ உரியவர்கள்மீது மருந்து சட்டத்தின் கீழ் சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT