கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர், சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டார். 
Regional03

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் - வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பொருத்தும் பணி தீவிரம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,494 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 86 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 2,715 வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 2,944 விவிபேட் உள்ளிட்ட மொத்தம் 8,374 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டது. மேலும், கூடுதலாக 796 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 156 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 168 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 2,298 வாக்குப்பதிவு மையங்களுக்கு 9,494 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிட உள்ள வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓசூர் குணசேகரன், வேப்பனப்பள்ளி கோபு, தளி ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT