தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், ஊத்தங்கரை யில் உள்ளூர் போலீஸார் மற்றும் தேர்தல் பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.
ஊத்தங்கரை காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமை வகித்தார். இதில், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, காவேரிப் பட்டணத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பை டிஎஸ்பி சரவணன் தொடங்கி வைத்தார். வேப்பனப் பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, சூளகிரி, பேரிகை சாலை, வாணியர் தெரு வழியாக சென்று நிறைவடைந்தது.
தருமபுரி