Regional02

வேடசந்தூரில் ஜூனியர் ரெட் கிராஸ் தொடக்க விழா :

செய்திப்பிரிவு

வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் தொடக்க விழா எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மாவட்டச் செயலாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேடசந்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வேல்வார் கோட்டைஅரசு பள்ளி ஆசிரியர் வேல்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேடசந்தூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT