காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை யில் உரிய ஆவணங்கள் இல்லா மல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.40.78 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பட்டணத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காவேரிப்பட்டணம் கோவிந்தப்பா முதலியார் தெருவைச் சேர்ந்த கால்நடை தீவன விற்பனையாளரும், நிலம் வாங்கி விற்பவருமான விமல் (42) என்பவர் வந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் பன்னிஅள்ளி ஊராட்சியில் நிலம் விற் பனை செய்யப்பட்ட தொகையை உரியவர்களிடம் வழங்க எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும்படையினர் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கற்பகவள்ளி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஊத்தங்கரையில் ரூ.2.38 லட்சம்
அப்போது, சிவம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, சின்னதள்ளபாடி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தளி சாலை ரயில்வேகேட் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக காரில் வந்த ரமேஷ் என்பவரிடம் நடந்த சோதனையில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.84 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல நேற்று காலை டிவிஎஸ் சோதனைச்சாவடி அருகே கீதாலட்சுமி தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், கெலமங்கலம் ஜீவா நகரைச் சேர்ந்த சுமதி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத் திருந்த சுமார் ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 419கிராம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் ஓசூர் சட்டப்பேரவைத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் குணசேகர் மூலமாக ஓசூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.