தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த கோவையைச் சேர்ந்த இன்ஜினீ யரின் கார், சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்த எரிந்தது.
கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் சுரேஷ்குமார்(43). இன்ஜி னீயர். இவர் தனது மனைவி, மாமனார், மாமியார், மகன், மகளுடன் நேற்று சுற்று லாவாக, காரில் திருச்சிக்கு வந் துள்ளார். திருச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு, மீண்டும் காரில், நேற்று மதியம் 2 மணியளவில், தஞ்சாவூர் பெரியகோயிக்கு செல்வதற்காக வந்துகொண்டிருந்தனர். திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சாலையில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, காரில் சிறிய அளவில் புகை வந்துள்ளது. இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட சுரேஷ்குமார், காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, குடும்பத்தினரை அவசரமாக காரிலிருந்து இறங்கச் செய்துள் ளார். அவர்கள் காரிலிருந்து இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலை கழக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.