Regional01

சங்கரன்கோவிலில் 15 மி.மீ. மழை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 15 மி.மீ., தென்காசியில் 11.6 மி.மீ., அடவிநயினார் அணையில் 10 மி.மீ., செங்கோட்டையில் 7 மி.மீ., கருப்பாநதி அணையில் 6.5 மி.மீ., குண்டாறு அணையில் 6 மி.மீ., ஆய்க்குடியில் 3.4 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் தணிந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 70.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 67.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 55.61 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 43 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி

50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 44.15 அடியாகவும், 22.96 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 13.05 அடியாகவும், 52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 8.75 அடியாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT