திருநெல்வேலியில் மாநகர காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக போலீஸாரும், துணை ராணுவத்தினரும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலியில் டவுன் அருணகிரி திரையரங்கு அருகே தொடங்கி பாப்பா தெரு, மகிழ்வண்ணநாதபுரம், பாட்டப்பத்து வரையில் இந்த கொடி அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதுபோல் புறநகரில் பதற்றமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள கூடங்குளம், வீரவநல்லூர், மறுகால்குறிச்சி பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப் பட்டது. திருநெல்வேலி மாநகர காவல்துறையில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் பொதுமக்களிடம் போலீஸார் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.