Regional01

வாகன சோதனையில் ரூ.1.72 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், கோவை போத்தனூரை சேர்ந்த அபுதாஹீர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 72,500-ஐ பறிமுதல் செய்தனர்.

தொழில் விஷயமாக பல்லடத்துக்கு பணத்துடன் வந்ததாக அவர் தெரிவித்த நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததைக் காரணம்காட்டி பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT