உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 308 வாக்குச்சாவடிகளில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை உதகை தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் பனுதர் பெஹரா நேற்று ஆய்வு செய்தார். ஆனைகட்டி, சிறியூர்,சிங்காரா, மாயாறு ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து உதகை- மசினகுடி சாலையில் சிறப்பு அதிரடிப் படையினரின் வாகன சோதனை பணிகள், உதகை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்.