மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 99.81 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 27-ம் தேதி 100 அடியை கடந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சுமார் 4 மாதங்கள் வரை 100 அடிக்கு குறையாமல் நீர்மட்டம் இருந்து வந்தது.
தற்போது, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 67 கனஅடியாக இருந்தது.
இரு தினங்களுக்கு முன்னர் 100.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 99.81 அடியானது. நீர்மட்டம் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் 100 அடிக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.