கள்ளக்குறிச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்று 2-ம் கட்டமாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதன்படி உளுந்தூர்பேட்டையில் உள்ள பெஸ்கி மேல்நிலைப் பள்ளியிலும், ரிஷிவந்தியத்தில் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்கராபுரத்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இப்பயிற்சி வகுப்பில் உளுந்தூர்பேட்டை தொகுதி 407 வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 1,952 வாக்குச்சாவடி அலுவலர்கள், ரிஷிவந்தியம் தொகுதி 374 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,796 வாக்குச்சாவடி அலுவலர்கள், சங்கராபுரம் தொகுதி 372 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,784 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி 416 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,996 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 7,528 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு, வழங்கப்பட்ட தேர்தல் பயிற்சிகள் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் எச்.எஸ்.ந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சியில் 7,528 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டது.