Regional03

பழனிசாமி சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் : செஞ்சியில் எம்.பி. விஷ்ணுபிரசாத் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

செஞ்சி திமுக வேட்பாளர் மஸ் தானை ஆதரித்து பெருங்காப்பூர், பசுமலைதாங்கல், மணலப்பாடி, அத்தியூர், மேல்அருங்குணம் உள்ளிட்ட இடங்களில் ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் அவர் பேசிய தாவது:

தமிழ்நாட்டை பழனிசாமி நாசமாக்கி, குப்பையாக்கி வைத் துள்ளார். இதனை சரி செய்ய ஸ்டாலின் திட்டம் அறிவித்த உடன் நானும் செய்வேன் என்கிறார் பழனிசாமி. இது நாள் வரை பழனிசாமி ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார். திமுக திட்டங்களை அறிவித்து ஆயிரம் ரூபாய் தருவோம் என்றால், தானும் தருவேன் என்கிறார். அவர் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

2006–2011ம் ஆண்டு வரை கருணாநிதி தமிழகத்தின் பொற்கால ஆட்சி நடத்தினார். அப்போது தான் கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்த ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் அரசு அறிவித்தது. அப்போது வேலை செய்த உடன் பணம் கிடைத்தது. இப்போது பணம் இரண்டு மூன்று மாதம் கழித்து வருகிறது. அதுவும் வேலை செய்த நாளை குறைத்து பாதியாக தருகின்றனர். இந்த நிலை மாற ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT