கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
Regional03

இயற்கை இடரை எதிர்கொள்ள நிரந்தர தீர்வு : கடலூர் திமுக வேட்பாளர் ஐயப்பன் வாக்குறுதி

செய்திப்பிரிவு

கடலூர் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஐயப்பன், தேவனாம்பட்டினம் பகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் கடலூர் தொகுதிக்கு நிரந்த தீர்வு காண அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையாற்ற தயாராக உள்ளேன். திமுகவை வெற்றிபெறச் செய்தால், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உதவித் தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அதிகளவில் மானியத்துடன் கூடிய சுழல் நிதி, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைத்திடும். கடலூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். திமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இயற்கை இடர்பாடுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் கடலூர் தொகுதிக்கு நிரந்த தீர்வு காண அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.

SCROLL FOR NEXT