Regional02

அரசு பேருந்து நடத்துநர் கொலை :

செய்திப்பிரிவு

சத்திரக்குடி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(45). இவர், கோவை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இவரிடம் சத்திரக்குடி ஜோதியேந்தலைச் சேர்ந்த முத்தரசு(35) கடன் வாங்கியுள்ளார். பணத்தை சுப்பிரமணி திருப்பிக் கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சுப்பிரமணியன் சத்திரக் குடிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியின் வீட்டுக்குச் சென்ற முத்தரசு தகராறு செய்துள்ளார். அப்போது சுப்பிரமணியின் கழுத்திலிருந்த தங்க செயினை முத்தரசு பறிக்க முயன்றுள்ளார். இதை தடுத்த சுப்பிரமணியனை அரி வாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு முத்தரசு தப்பிச் சென்றார்.

SCROLL FOR NEXT