Regional02

சிவகங்கை அருகே - தந்தை, மகன் வெட்டி கொலை :

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே பில்லூர் அழுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா (60). இவரது மகன் சாமிநாதன் (35). நேற்று கருப்பையா ஆடு மேய்க்கவும், சாமிநாதன் விவ சாயப் பணிக்காகவும் சென்றனர். இந்நிலையில் இருவரும் அருகருகே வெட்டப்பட்டுக் கிடந் தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது கருப்பையா ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து படுகாயமடைந்த சாமிநாதனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், சாமிநாதன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும், இதில் உறவினர்கள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT