100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இலக்கியக் களம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் திண்டுக்கல்லில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றோர். 
Regional02

இலக்கியக் களம், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் - 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம் : திண்டுக்கல்லில் நடைபெற்றது

செய்திப்பிரிவு

திண்டுக்கல் இலக்கியக் களம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், நேரு யுவகேந்திரா, ஜி.டி.என். கலைக் கல்லூரி மற்றும் காந்தி கிராம பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப் புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்துநிலை யத்தில் இருந்து மணிக்கூண்டு வரை இளம் வாக்காளர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப் பட்டன. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்டாயம் வாக்களிப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வகையில் வாக்காளர்கள் பங்கேற்ற கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.

தேர்தல் விதிமுறைகள் குறித்தும், வாக்களிப்பது ஜன நாயகக் கடமை என்பதை வலியுறுத்தியும் பேராசிரியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகள் ஒலிபரப்பு செய்யப் பட்டது.

SCROLL FOR NEXT