வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். 
Regional02

கருத்துக் கணிப்புகளை எல்லாம் உடைத்து அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் : வேப்பனப்பள்ளி வேட்பாளர் கே.பி.முனுசாமி நம்பிக்கை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கே.பி.முனுசாமி எம்பி, நேற்று குந்தாரப்பள்ளி கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுகஆட்சியில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும், திருப்திகரமாக எடுத்து சென்றுள்ளதால் வெற்றி உறுதியாகி உள்ளது. பெண்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். தாய் என்பவர் தெய்வத்திற்கும் மேலானவர். அவர்களை சங்கடப்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவது மிக, மிக வேதனையாக உள்ளது. திமுக தலைமை ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கட்சி தலைமையே இது போன்றவர்களுக்கு உறு துணையாக இருப்பதாக நாட்டு மக்கள் கருதுவார்கள். திமுகவில் உள்ள தலைவர்கள் பெண்கள் மீது மரியாதை இல்லாத தலைவர் களாக தான் உள்ளார்கள். இதற்கு தர்மம் சரியான தண்டனையை வழங்கும்.

கருத்துக்கணிப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்புகள் எல்லாம் உடைக்கப்பட்டு நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்றார்.

SCROLL FOR NEXT