Regional01

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் கருத்தரங்கு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்துறை சார்பில் இந்திய இணையதள நூலக தகவல் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

நூலகத்துறை தலைவர் ப.பால சுப்பிரமணியன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி தலைமை வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்துறை பேராசிரியர் எம்.சாதிக் பாட்சா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நூலகத் துறை பேராசிரியர் ரெ.சேவுகன் ஆகியோர் ஆய்வு மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வர் அருள்தேவதாஸ், பல்கலைக்கழக நூலகர் ஆ.திருமகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து 75-க்கும்மேற்பட்ட ஆய்வு மாண வர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT