Regional03

பறக்கும்படை சோதனையில் ரூ.1.18 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஈச்ச பொட்டல்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும்படை குழுவினர்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சங்கரன் கோவிலில் இருந்து கடைய நல்லூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்திசோதனையிட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த செந்தட்டியாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் ரூ.1.18 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது.

நகை வாங்க பணத்தை கொண்டு சென்றதாக கூறிய முருகன், அதற்கு உரிய ஆவணத்தை வைத்திருக் காததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT