முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசாவைக் கண்டித்து, அவிநாசியில் அதிமுகவினர் நேற்று கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் த.லோகேஷ் தமிழ்செல்வன், ஒன்றியச் செயலாளர்கள் அ.ஜெகதீசன் (மேற்கு), சேவூர் ஜி.வேலுசாமி (வடக்கு), மு.சுப்பிரமணியம் (தெற்கு), மாவட்ட இணைச் செயலாளர் லதா சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆ.ராசா மற்றும் ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.