திமுக எம்பி ராஜாவை கண்டித்து சிதம்பரத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional03

திமுக எம்பி ராஜாவை கண்டித்து - கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

திமுக எம்பி ராஜாவை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ராஜாவை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

துணை செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் வேணு புவனேஸ்வரன், மாவட்ட அவவைத்தலைவர் குமார், கூட்டணிக்கட்சியான தமாகா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திமுக எம்பி ராஜாவை கண்டித்து முழக்கங்கள் எழுப் பப்பட்டது. இது போல கடலூர், புவனகிரி,காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT