Regional02

ஆதிஜெகநாத பெருமாள் கோயில் தேரோட்டம் : திருப்புல்லாணியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவத் தேரோட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதிஜெக நாதப் பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி பிரமோற்சவத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. நான்கு ரத வீதிகளில் ஏராளமான பக்தர் கள் தேரை இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வந்தபோது தேங்காய் உடைத்து வழிபட்டனர். சேதுக்கரையில் சுவாமி இன்று எழுந்தருளி தீர்த்த உற்சவம் நடைபெறும். நாளை பங்குனி உற்சவம் விடையாற்றி பூஜை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன், நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT