பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த கை.களத் தூர் காலனியைச் சேர்ந்தவர் மெய்யப்பன் மகன் நந்தீஸ் குமார்(30). வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் இல்ல திரு மண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு நேற்று முன் தினம் இரவு ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவிலிருந்த 35 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றி ருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.